சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சரிவு நிலைமை பதிவாகியுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமெனுவல் மெக்ரோன் தேர்தலுக்கு அறிவித்துள்ள நிலையில் இவ்வாறு பங்குச் சந்தைகளில் நிச்சயமற்ற நிலைமை உருவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிரான யூரோவின் பெறுமதியும் அழுத்தங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் ஜனாதிபதியின் தீர்மானம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸின் தேர்தல் அறிவிப்பு பங்குச் சந்தைகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.