சுவிட்சர்லாந்தில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 17171 இலத்திரனியல் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இலத்திரனியல் கார்களின் பதிவு எண்ணிக்கை சற்றே குறைவடைந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் இலத்திரனியல் வாகனங்களை விடவும் ஹைபிரைட் வாகனங்கள் மீதான மக்களின் நாட்டம் தொடர்ந்தும் அதிகளவில் காணப்படுகின்றது.
இந்த ஆண்டு ஆரம்பம் முதல் ஹைபிரைட் வாகனங்கள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக இலத்திரனியல் வாகனங்களை விடவும் இரண்டு மடங்கு ஹைபிரைட் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.