சுவிட்சர்லாந்திற்கும் அங்கோலாவிற்கும் இடையில் வரி குறித்து உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது.
இரட்டை வரி அறவீடு தொடர்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி உடன்படிக்கை குறித்து முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சுவிட்சர்லாந்து அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இரு தரப்பு பொருளாதார உறவுகள் மற்றும் வரி அறவீடு தொடர்பில் இந்த புதிய உடன்படிக்கை அமுல்படுத்தப்பட உள்ளது.
இந்த புதிய உடன்படிக்கை மூலம் இரு நாடுகளுக்கும் பல்வேறு வழிகளில் நலன்கள் கிடைக்கப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்னதாக இரு நாடுகளினதும் நாடாளுமன்றங்கள் இதனை அங்கீகரிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.