உக்ரைன் சமாதான பிரகடனத்திற்கு 84 நாடுகள் ஆதரவினை வழங்கியுள்ளன.
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உக்ரைன் சமாதான மாநாட்டில் இந்த பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் நிறுவனங்கள் இந்த மாநாட்டில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்மானத்திற்கு இந்தியா, பிரேஸில் மற்றும் தென் ஆபிரிக்கா போன்ற பிரிக்ஸ் நாடுகள் ஆதரவளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்மானியா, பஹ்ரைன், பிரேஸில், இந்தியா, இந்தோனேசியா, கொலம்பியா, லிபியா, மெக்ஸிக்கோ, சவூதி அரேபியா, தென் ஆபிரிக்கா, சுரினாம், தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இறுதிப் பிரகடனத்தில் கையொப்பமிடவில்லை.
இந்த சமாதான முனைப்புக்களில் ரஸ்யாவை எவ்வாறு இணைத்துக் கொள்வது என்பது குறித்து தெளிவான திட்டங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இதேவேளை, இந்த சமாதான முனைப்புக்களுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என சுவிட்சர்லாந்து ஜனாதிபதி வயோலா ஹம்ஹார்ட் தெரிவித்துள்ளார்.