19.6 C
Switzerland
Monday, October 7, 2024

உலகின் செலவு கூடிய நகரங்களில் வரிசையில் 4 சுவிஸ் நகரங்கள்

Must Read

இந்த ஆண்டில் உலகில் மிகவும் செலவு கூடிய நகரங்கள் குறித்த பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பிரஜைகளுக்கு உலகில் அதிக அளவு செலவு கூடிய நகரங்களின் பட்டியல் ஒன்று இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு உள்ள உள்ளிட்ட சில காரணிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

வெளிநாட்டு பிரச்சனை இருப்பதற்கு மிகவும் செலவு அதிகமான நகரங்கள் பற்றிய விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பணியாளர்கள் வசிப்பதற்கு செலவு மிகவும் அதிகமான நகரமாக மீண்டும் ஒருமுறை ஹாங்காங் தெரிவாகியுள்ளது.

குறிப்பாக வாழ்க்கைச் செலவினை அடிப்படையாகக் கொண்டு இந்த கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளிலும் ஹாங்காங் செலவு கூடிய நகரமாக பதிவாகி இருந்தது.

உலகில் மிக அதிக செலவுடைய 10 நகரங்களில் சுவிட்சர்லாந்தின் சூரிச், ஜெனிவா, பேசல் மற்றும் பேர்ன் ஆகிய நகரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முறையே மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் இடங்களை இந்த சுவிஸ் நகரங்கள் வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 226 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு இடத்திலும் 200 விடயங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து, உணவு, ஆடை, வீட்டு சாதனங்கள் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செலவு எவ்வாறு அமைந்துள்ளது என்பதன் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிக அளவு செலவு கூடிய நகரமாக நியூயோக் காணப்படுவதுடன், பிரித்தானியாவின் செலவு கூடிய நகரமாக லண்டன் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச பட்டியலில் நியூயார்க் நகரம் ஏழாம் இடத்தையும் லண்டன் நகரம் எட்டாம் இடத்தையும் வகிக்கின்றன.

வீடுகள், குடியிருப்புகளுக்கு காணப்படும் கிராக்கி செலவு அதிகரித்த நிலைமை போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்களிலும் தாக்கத்தை செலுத்தி செலவை அதிகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு தர வரிசையில் வீடுகளுக்கான செலவு முதன்மையானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செலவு குறைந்த நகரங்களாக பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் மற்றும் நைஜீரியாவின் லாகோஸ் அண்ட் அபுஜா நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

எனினும் நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில் இவ்வாறு செலவு குறைந்த நகரங்களாக இவை பட்டியலப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகின் அதிகூடிய செலவுகளை உடைய நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை ஹாங்காங், இரண்டாம் இடத்தை சிங்கப்பூரும், மூன்றாம் இடத்தை சூரிச்சும், நான்காம் இடத்தை ஜெனிவாவும், ஐந்தாம் இடத்தை பேசலும், ஆறாம் இடத்தை பேர்னும், ஏழாம் இடத்தை நிவ்யோர்க்கும், எட்டாம் இடத்தை லண்டனும், ஒன்பதாமிடத்தை நசாயூவும், பத்தாம் இடத்தை லாஸ் ஏஞ்சல்ஸும் பெற்றுக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES