சுவிட்சர்லாந்தில் ஏதிலிக் கோரிக்கை விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மே மாதம் அதிகளவான ஏதிலிக் கோரிக்கை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 2357 ஏதிலிக் கோரிக்கை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக குடிவரவு செயலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தை விடவும் 3 வீதம் கூடுதல் விண்ண்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
மேலும் 2015ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த எண்ணிக்கை 15 வீத அதிகரிப்பாகும்.
ஏதிலி விண்ணப்பங்கள் செய்தவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் 840 பேர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்தபடியாக துருக்கிப் பிரஜைகள் ஏதிலி அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்துள்ளனர்.
எரித்திரியா, அல்ஜீரியா மற்றும் மொரொக்கோ ஆகிய நாடுகளிலும் ஏதிலி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.