சுவிட்சர்லாந்தில் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில், நாட்டின் பிரதான தேசிய பாதைகளில் 48807 மணித்தியாலங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த போக்குவரத்து நெரிசல் நிலைமையானது 22.4 வீதம் என தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்து போக்குவரத்து சாலைகளில் 29.6 பில்லியன் கிலோ மீற்றர் தூரம் வாகனங்கள் பயணித்துள்ளன.