சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் தொடர்பில் சாதகமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் சில மாதங்களில் சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் கிரமமாக முன்னேற்றமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து இரண்டு சாதகமான எதிர்வுகூறல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக சுவிட்சர்லாந்து பொருளாதார வளர்ச்சி வழமையை விடவும் குறைந்த வேகத்தில் காணப்பட்டது.
எனினும் இந்த நிலைமையானது மிகவும் வேகமாக மாற்றமடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டு பகுதியிலும் அடுத்த ஆண்டிலும் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர் குழு மற்றும் சூரிச் பொருளாதார நிறுவகம் என்பனவற்றினால் இந்த எதிர்வுகூறல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி நிலைமை அதிகரிப்பு பதிவாகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.