அமெரிக்காவில் விமான பயண கட்டணங்களில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதத்தில் அமெரிக்க விமான பயண கட்டணங்களில் கட்டணங்கள் 3 தசம் ஆறு வீதத்தினால் குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இவ்வாறு விமான கட்டணங்கள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நுகர்வோர் விலை சுட்டெண் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமெரிக்காவின் விமான பயண கட்டணங்கள் 8.1 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மே மாத விமான கட்டணங்கள் 5.9 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாகவும் இது ஓராண்டு கால ஒப்பீட்டு முடிவு எனவும் தெரிவிக்கப்படுகிறது.