இலங்கையில் வீடுகளை வாடகைக்கு விடுவோரிடமிருந்து வரி அறவிடு செய்யப்பட உள்ளது.
எதிர்வரும் ஆண்டில் அரச வருமானங்களை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு வீட்டை வாடகைக்கு விடுவோர் மீது இவ்வாறு வரி அறவீடு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளார்.
அரசாங்கம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 வீத வருமானத்தை இந்த வாடகை வரி மூலம் அடுத்த ஆண்டு திரட்ட உள்ளதாகவும், 2026ம் ஆண்டில் இந்த தொகை 0.4 வீத வருமானத்தை திரட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செல்வந்தவர்களிடம் இவ்வாறு வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாதாரண வருமானம் ஈட்டுவோரிடம் இந்த சொத்து வரி அறவீடு செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை பாரியளவு வாடகைக்கு விடுபவர்களிடமிருந்து வரி அறவீடு செய்யப்பட உள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.