எச்.எஸ்.பி.சீ என்ற தனியார் வங்கி சுவிட்சர்லாந்து நிதிச் சலவை சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து நிதி சந்தை மேற்பார்வை அதிகாரசபை இந்த விடயம் தொடர்பில் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் குறித்த வங்கிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் எச்.எஸ்.பி.சீ வங்கியானது சுவிட்சர்லாந்து நிதிச் சலவை சட்ட திட்டங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரண்டு சந்தர்ப்பங்களில் வங்கி நியதிகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சொத்துக்களின் பின்னணி, அதன் நோக்கம் போன்ற காரணிகளை கருத்திற் கொள்ளாது வங்கி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிதிச் சந்தை சட்டங்கள் பாரதூரமான அளவில் மீறப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.