சுவிட்சர்லாந்தில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய பொது சுகாதார அலுவலகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரையில் தட்டமையின் நோயினால் பாதிக்கப்பட்ட 87 பேர் பதிவாகியுள்ளனர்.
கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தட்டம்மை நோயாளர்கள் எவரும் பதிவாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023 ஆம் ஆண்டு 26 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இதுவரையில் நாட்டில் சுமார் 103 தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக பொதுச் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியில் பதிவான தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை வெறும் 27 என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், தட்டம்மை நோய், நாட்டில் பெரிய அளவில் தொற்றாக பரவக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
நோயை தடுத்து பாதுகாக்கும் நோக்கில் அதிகளவான தடுப்பு ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும் பெருமளவான சிசுக்களுக்கு குறிப்பாக 94 வீதமான சிசுக்களுக்கு தட்டம்மை தடுப்பூசியை இயற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் தட்டமை நோயினால் பாதிக்கப்பட்டவர்களே அதிக அளவில் இவ்வாறு சுவிட்சர்லாந்தில் நோயாளிகளாக பதிவாகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.