சுவிட்சர்லாந்தின் பேர்ன் பகுதியில் பாரிய அளவில் மின்சார தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு மின்சார தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 19000 வீடுகளுக்கு மின்சார தடை ஏற்பட்டதாக மற்றும் உட்கட்டுமான நிறுவனமான பிகே டபுள்யூ அறிவித்துள்ளது.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு மேல் இவ்வாறு மின்சாரத் தடை நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பேர்ன் நகரின் வடக்கு பகுதிகளே அதிகளவில் மின்சாரத் தடையினால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.