இயற்கை உணவு வகைகளை நுகரும் நாடுகளின் வரிசையில் சுவிட்ஸர்லாந்து முன்னணி வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது சுவிட்சர்லாந்து மக்கள் இயற்கை உணவு பொருட்கள் அதிக அளவு நுகர்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் இயற்கை உணவு உற்பத்திகளுக்கு சராசரியாக 454 சுவிஸ் பிராங்குகள் செலவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பயோசுயிஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
ஐரோப்பா முழுவதிலும் இந்த இயற்கை உணவு உற்பத்தி நுகர்வு தொடர்பிலான தரப்படுத்தல் நடத்தப்பட்டுள்ளது.
இயற்கை உணவு உற்பத்திகளை அதிக அளவு உட்கொள்ளும் நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தையும் வகிக்கின்றது.
டென்மார்க், ஆஸ்திரியா, லக்ஷம்பர்க் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் முறையே இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடங்களை வகிக்கின்றன.
கடந்த 2023 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் இயற்கை உணவு உற்பத்திகளின் விற்பனை ஏழு வீதத்தினால் அதிகரித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலப்பகுதியில் சுவிட்சர்லாந்தில் இயற்கை உணவு உற்பத்தி விற்பனை பாரிய அளவில் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.