உலகில் போட்டித் தன்மை கூடிய நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்து முன்னிலை வகிக்கின்றது.
உலகின் போட்டித் தன்மை சிறந்த முறையில் காணப்படும் நாடுகளின் தரவரிசையில் சுவிட்சர்லாந்து இரண்டாம் இடத்தை வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
லாவுசானை மையமாகக் கொண்ட IMD வியாபார கல்லூரியின் தரவரிசையின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் வியாபார போட்டித் தன்மை சிறந்த முறையில் காணப்படும் நாடாக சிங்கப்பூர் முதலிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான போட்டித் தன்மை தரவரிசை மதிப்பீடு சுமார் 67 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
164 விடயங்களின் அடிப்படையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களின் செயத்திரன் உட்கட்டுமான வசதிகள் அரசாங்கத்தின் செயல்பாடு போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்த தரவரிசை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஐ எம் டி வியாபார கல்லூரி இந்த தரவரிசை குறித்த ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.