சுவிட்சர்லாந்தில் சிறுவர் குற்ற செயல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டில் சிறுவர்களினால் இழைக்கப்பட்ட குற்ற செயல்களின் எண்ணிக்கை கடந்த 2022 ஆம் ஆண்டை விடவும் 11 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்து மத்திய புள்ளிவிபரவியல் அலுவலகம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
15 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட சிறுவர் குற்றவாளிகளின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2023 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது 60 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
தாக்குதல்கள், மோதல்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 9 ஆண்டுகால பகுதியில் குற்ற செயல்களின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்வடைந்துள்ளது.