வவுனியாவில் நிலநடுக்கம்

Must Read

இலங்கையின் வவுனியாவில் சிறியளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் இரவு இவ்வாறு நிலநடுக்கம் பதிவானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புவிச்சரிதவியல் நிறுவனத்தின் தேசிய பூமியதிர்வு தகவல் நிலையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இரவு 11.01 மணியளவில் வவுனியாவில் சுமார் 2.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஹாகன்டாவர, ஹக்மன மற்றும் பல்லேகலே ஆகிய நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்களில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நடுக்கம் காரணமாக சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைய சில ஆண்டுகளாகவே இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறு சிறியளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.

LATEST ARTICLES

ADVERTISEMENT

Contact
info@tamilnews.ch
to advertise here.