கனடாவின் விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனத்தின் விமானப் பயணங்கள் சில ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான சேவை நிறுவனத்தின் நாற்பது விமான பயணங்கள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான சேவை நிறுவனத்திப் விமானப் பராமரிப்பு பணியாளர்களினால் முன்னெடுக்கப்பட உள்ள தொழிற்சங்கப் போராட்டத்தின் காரணமாக இவ்வாறு விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்றைய தினமும் இன்றைய தினமும் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதாக வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
விமான சேவை நிறுவனத்தின் 670 பணியாளர்கள் இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தில் குதிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் இந்த போராட்டம் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்ட காரணத்தினால் சுமார் ஆறாயிரத்து ஐநூறு பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.