சுவிட்சர்லாந்தில் பிறப்பு வீதத்தில் பாரியளவு சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2023ம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கான பிள்ளைகள் எண்ணிக்கை 1.33 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1.39 ஆக காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டில் மொத்தமாக 80000 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் 2022ம் ஆண்டை விடவும் இது 2.8 வீத வீழ்ச்சி எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு பதிவாகியுள்ள பிறப்பு வீத வீழ்ச்சியில் சுவிட்சர்லாந்து பெண்கள் மத்தியிலான பிறப்பு வீத வீழ்ச்சி மோசமான நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு முதல் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து செல்லும் போக்கினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது பிள்ளை பிறப்பு 2.3 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.