சுவிட்சர்லாந்தன் ஜூரா கான்டனில் புதிய மாவட்டமொன்று உருவாக்கபடுவதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான பிரேரணை ஜுரா நாடாளுமன்றில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஜூரா கான்டனில் மூன்று மாவட்டங்கள் காணப்படுவதுடன் நான்காவதாக மோவ்டியர் என்ற மாவட்டம் உருவாக்கப்பட உள்ளது.
புதிய மாவட்டம் உருவாக்கும் திட்டத்திற்கு ஜூரா கான்டன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை 57 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய மாவட்டத்திலிருந்தும் சட்ட மன்ற உறுப்பினர்கள் அடுத்த தேர்தலில் தெரிவு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூரா கான்டனில் ஏற்கனவே Delsberg, Pruntrut மற்றும் Franches-Montagnes ஆகிய மாவட்டங்கள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Moutier மாவட்டத்தில் காணப்படும் ஒரே நகராட்சியாக Moutier காணப்படுகின்றது.
இந்த நகரம் எதிர்வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி பேர்கன் கான்டனிலிருந்து ஜூரா கான்டனுக்கு மாற்றப்பட உள்ளது.