சுவிட்சர்லாந்து அரசாங்கம் விவசாய மானியத் தொகைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 2026 முதல் 2029ம் ஆண்டு வரையில் 13.8 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த தொகையானது தற்பொழுது ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையிலும் 230 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
2022 முதல் 2025ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு தொகையிலும் 2.5 வீத நிதி குறைப்பினை சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.