இந்த கோடை காலத்தில் ஜெனீவா விமான நிலைய பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பயணிகள் எண்ணிக்கை கோவிட் பெருந்தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கிறது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சுமார் 3.2 மில்லியன் பயணிகள் விமான நிலையத்தின் வழியாக பயணம் செய்வார்கள் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பயணிகள் எண்ணிக்கை 2019 ஆம் கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய புள்ளிவிவரங்களை விட முறையே 1.6 வீதம் மற்றும் 1.8வீதம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோடை காலத்தில் ஜெனீவா விமான நிலையத்திலிருந்து மொத்தம் 124 இடங்களுக்கு 45 விமான நிறுவனங்கள் சேவையில் ஈடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் ஈஸிஜெட் மற்றும் சுவிஸ் நிறுவனங்களால் இயக்கப்படுகின்றது.
பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ற வகையில் விமான நிலையப் பணியாளர் எண்ணக்கையும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.