19.6 C
Switzerland
Monday, October 7, 2024

போயிங் நிறுவனத்திடம் 24.8 பில்லியன் டொலர் நட்டஈடு கோரி வழக்கு

Must Read

உலகின் முதனிலை விமான உற்பத்தி நிறுவனமான போயிங் நிறுவனத்திடம் 24.8 பில்லியன் டொலர் நட்டஈடு கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இரண்டு போயிங் 737 மெக்ஸ் விமான விபத்துகளில் உயிரிழந்தவர்களது குடும்பத்தினர் இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

“அமெரிக்க வரலாற்றில் மிகக் கொடிய பெருநிறுவனக் குற்றத்திற்காக” வழக்குத் தொடர்வதாக சட்டத்தரணிகள் ஊடாக தெரிவித்துள்ளனர்.

“போயிங் நிறுவனத்தின் குற்றங்களுக்காக கோரப்படும் நட்டஈட்டுத் தொகை நியாயமானது என குடும்பங்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி போல் காசெல் தெரிவித்துள்ளார்.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இரண்டு விமான விபத்துக்களில் 346 பேர் கொல்லப்பட்டனர்.

​​அந்த நிறுவனத்தை வழிநடத்துபவர்கள் மீது அமெரிக்க அரசாங்கம் வழக்குத் தொடர வேண்டும் சட்டத்தரணி கோரியுள்ளார்.

போயிங்கின் தலைமை நிர்வாகி டேவ் கால்ஹவுன் மன்னிப்பு கோரியிருந்தார்.

விபத்தில் பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்களால் தாங்கள் ஏற்படுத்திய துன்பங்களுக்காக நான் மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டிருந்தார்.

போயிங் 737 மேக்ஸ்  விமானங்கள் இரண்டு வெவ்வேறு சந்தாப்பங்களில் ஆனால் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விபத்துள்ளானது.

அக்டோபர் 2018 இல், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களுக்குப் பிறகு, லயன் ஏயார் விமானம் ஜாவா கடலில் விழுந்ததில் 189 பேர் இறந்தனர்.

2019ம் ஆண்டு மார்ச் மாதத்திலும், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து புறப்பட்ட ஆறு நிமிடங்களில் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் இருந்த 157 பேரும் கொல்லப்பட்டனர்.

இரண்டு விபத்துகளும் தவறான விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் தொடர்புடையவை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

போயிங் தலைமை நிர்வாக அமெரிக்க காங்கிரஸ் சபையில் சாட்சியமளித்த போது நிறுவனம் தவறிழைத்தமையை ஒப்புக்கொண்டிருந்தார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே நீதிக் கிடைக்கும் வரையில் போராடப் போவதாக பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

MORE ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

LATEST ARTICLES