சுவிட்சர்லாந்தின் வோட் கான்டனில் போலி பொலிஸ் அதிகாரி போன்று தோன்றி மோசடிகளில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதியவர்களை ஏமாற்றி குறித்த நபர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் ஒர் பிரெஞ்சுப் பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து குறித்த நபர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபரின் ஹோட்டல் அறையிலிருந்து பெருந்தொகை பணம் மீட்கப்பட்டுள்ளது.
முதியவர்களை ஏமாற்றி வங்கி அட்டைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றிலிருந்து பணம் களவாடப்பட்டுள்ளது.
குறித்த நபர் பல்வேறு இடங்களில் மோசடிகளில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.