விமான பயணங்கள் காரணமாக சுவிட்சர்லாந்தில் எரிபொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தில் எரிபொருள் பயன்பாடு அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கடந்த ஆண்டில் மொத்தமாக 767450 terajoules எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்றுக்கு பின்னர் நாட்டில் விமான பயணங்கள் அதிகரித்த காரணமாக கூடுதல் அளவில் எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவிட் பெருந்தொற்று காலத்தின் பின்னர் சுவிட்சர்லாந்தில் விமான பயணங்களுக்கான எரிபொருள் பயன்பாடு சுமார் 20% அதிகரித்துள்ளது.
இந்த பயன்பாடு மொத்த எரிபொருள் பயன்பாட்டிலும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
எவ்வாறெனினும், 2019 ஆம் ஆண்டுக்கு முன்னதாக நுகரப்பட்ட அளவு எரிபொருள் இன்னமும் நுகரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக விமான பயணங்களில் இவ்வாறு எரிபொருள் நுகரப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சனத்தொகை அதிகரிப்பு, வாகனங்களின் அதிகரிப்பு, வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற எதுக்கள் காரணமாகவும் எரிபொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.