சுவிட்சர்லாந்து ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாள் ஒன்றுக்கு ஆறு தடவைகள் இவ்வாறு வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின்றன என தெரிவிக்கப்படுகின்றது.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் அதிகளவு வன்முறைகள் இடம்பெற்று வருவதாக சுவிட்சர்லாந்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் பல்வேறு தரப்பினரும் பயணிப்பதன் காரணமாக இவ்வாறான மோதல்கள் வன்முறைகள் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ரயில் நிலைங்களில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை 15 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
ரயில் பணியாளர்களும் தாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.