சுவிட்சர்லாந்தின் வாலாயிஸ் கான்டனில் சீரற்ற காலநிலையினால் பாரியளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மழை வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
வாலாயிஸ் கான்டனில் சீரற்ற காலநிலை காரணமாக பாரியளவில் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காற்று காரணமாக சில பகுதிகளில் கடுமையான கடுமையான சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில இடங்களில் நீர்மட்டம் உயர்வடைந்து செல்வதாகவும், வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.