அமெரிக்காவில் கறுப்பின பயணிகளை விமானத்திலிருந்து வெளியேற்றிய விமானப் பணியாளர்கள் சிலர் பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் பணியாளர்களே இவ்வாறு பணியிடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
கறுப்பின பயணிகள் சிலரின் உடலில் தூர்நாற்றம் வீசுவதாக சில பயணிகள் செய்த முறைப்பாட்டை அடுத்து இவ்வாறு அந்தப் பயணிகள் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பணிகள் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விமான சேவை நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி வருத்தம் வெளியிட்டுள்ளதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.