சுவிட்சர்லாந்தின் க்ராபுன்டென் கான்டனின் மிசொக்ஸில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சுமார் ஐந்து கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பகுதிகளுக்கான நீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை வெள்ளம், பலத்த காற்று மற்றும் மண்சரிவு காரணமாக குறித்த பகுதியில் மூன்று பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
தம்பதியனரும் வயோதிப் பெண் ஒருவரும் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
முன்னதாக குறித்த பகுதியில் சீரற்ற காலநிலையினால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை நான்கு என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மண்சரிவு காரணமாக இவர்கள் புதையுண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மண் சரிவில் சிக்கிய ஒரு பெண்ணை மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.
கடுமையான மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவு காரணமாக குறித்த பகுதியைச் சேர்ந்த 230 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.