சுவிட்சர்லாந்தில் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
கடுமையான காற்று மற்றும் மழை வெள்ளம் காரணமாக இவ்வாறு நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் க்ராபுன்டன் கான்டனின் மிஸொக்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் க்ராபுன்டன் கான்டனில் மழை வெள்ளம், பலத்த காற்று நிலைமை நீடித்து வந்ததாகவும் இன்றும் அந்த நிலைமையை அவதானிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சில வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.