சுவிட்சர்லாந்தில் இந்திய குடும்பம் ஒன்றின் மீது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டுப் பணியாளர்களை துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பணியாளர்கள துன்புறுத்தியமைக்காக இந்திய குடும்பத்தின் தாய் தந்தையருக்கு நான்கரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மகன் மற்றும் மருமகளுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட போது குறித்த இந்திய குடும்பத்தினர் நீதிமன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி இந்த இந்திய குடும்பத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைகளின் போது குறித்த இந்திய குடும்பத்தினர் குற்றவாளிகள் அல்ல என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்தக் குடும்பத்தினர் பலவந்தமான அடிப்படையில் குறித்த வீட்டுப் பணியாளர்களை இந்தியாவிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு அழைத்து வரவில்லை என நீதிமன் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.