சுவிஸ் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
அனேகமான பிரதான பாதைகளில் கூடுதல் எண்ணிக்கையில் வாகனங்கள் பயணம் செய்வதாக மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கருத்து கணிப்பில் பங்கு பற்றிய 60 வீதமானவர்கள் கூடுதல் அளவில் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
பொதுப் போக்குவரத்து நெரிசல்களை தவிர்ப்பதற்கு ரயில் மற்றும் படகு சேவைகளை மாற்று வழிகளாக பயன்படுத்த முடியும் என பரிந்துரை செய்துள்ளனர்.
சுமார் 2000 பேரிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
பிரதான வீதிகள் விஸ்தரிக்கப்பட வேண்டும் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.