சுவிட்சர்லாந்து கைக்கடிகார ஏற்றுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் இவ்வாறு கைக்கடிகார ஏற்றுமதியில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் கைக்கடிகார விற்பனை அல்லது ஏற்றுமதி 2.2 வீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த மே மாதம் சுவிட்சர்லாந்தில் 2.29 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான கைக்கடிகாரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்து எல்லை பாதுகாப்பு மற்றும் சுங்க அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு அதிக அளவு கைக்கடிகாரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட போதிலும் ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதியில் சரிவு பதிவாகியுள்ளது.
கடந்த நான்கு மாத காலங்களாகவே இவ்வாறு ஏற்றுமதியில் சிறிதளவு சரிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.