சுவிட்சர்லாந்து மண் சரிவில் காணாமல் போனவர்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மண் சரிவு காரணமாக மூன்று பேர் காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இன்று காலையும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போலீஸ் மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மற்றும் உறங்குவானூர்திகளைக் கொண்டு இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இரவு நேரத்தில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டது.
நேற்று முன்தினமும் இரவில் தேடுதல் நடவடிக்கைகள் தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
மண் சரிவு காரணமாக வயோதிப பெண் ஒருவரும் ஒரு தம்பதியினரும் உள்ளடங்களாக காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில தினங்கள தினங்களாக நீடித்து வரும் சீரற்ற கால நிலை காரணமாக சொத்துக்களுக்கு பாறியளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.