சுவிட்சர்லாந்தின் பேர்ன் கான்டனின் ருடர்ஸ்வில் நகரில் விமான விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த விமான விபத்துச் சம்பவம் தொடர்பில் பேர்ன் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
எவ்வாறெனினும் விமான விபத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது பற்றியோ அல்லது விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய விபரங்களோ இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களாக வெளியிடப்படவில்லை.
இந்த விமான விபத்து இடம்பெற்ற பகுதியில் நேயாளர் காவு வண்டிகள் மற்றும் தீயணைப்புப் படை வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானத்தில் இரண்டு பயணிகள் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.