ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மத்திய மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான பயணங்களை அதிகரிக்ககத் திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கூடுதல் எண்ணிக்கையிலான விமானங்களை குத்தகைக்கு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சட்ர்ட நூட்டால் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு இவ்வாறு விமான சேவையை விஸ்தரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய வலயத்தில் பயணிகளின் எண்ணிக்கை கேள்வி அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இதன் அடிப்படையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் கூடுதல் எண்ணிக்கையான விமானங்களை பிராந்தியடையத்தில் சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் தற்பொழுது 21 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் இந்த எண்ணிக்கை 22 ஆக அதிகரிக்கப்பட உள்ளதாகவும் பிரதம நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் மேலும் மூன்று விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்திய வளையங்களுக்கான விமானங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது பயணங்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கான விமான சேவைகளை அதிகரிக்கவும் புதிய இடங்களுக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் நடவடிக்கைகள் மறுசீரமைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.