பிரேசில் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டினோ ஜெனிவாவில் உணவகம் ஒன்றை நிறுவியுள்ளார்.
முன்னாள் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ சுவிட்சர்லாந்தில் முதல் தடவையாக இவ்வாறு உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
R10 என இந்த உணவகத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தில் பேர்கர் வகைகள் விற்பனை செய்யப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
ஜெனீவாவின் Châtelaine பகுதியில் நிறுவப்பட்டுள்ள இந்த உணவகத்தை ரொனால்டீனா நேரில் வந்து அங்குரார்ப்பணம் செய்துள்ளார்.
ரொனால்டீனா 2002ம் ஆண்டு பிரேசில் அணி உலகக் கிண்ணத்தை வென்ற போது அந்த அணியின் முக்கிய வீரராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.