உலகின் மிகச் சிற்நத விமான சேவை நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்கைட்ராக்ஸ் உலக விமான சேவை விருதுகள் என்ற பெயரில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் 350 விமான சேவை நிறுவனங்கள் தொடர்பான பயணிகளின் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
சுமார் நூறு நாடுகளின் விமான சேவை நிறுவனங்கள் தொடர்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
உலகின் மிகச் சிற்நத விமான சேவை நிறுவனங்களின் தர வரிசையில் கட்டார் எயார்வேஸ் நிறுவனம் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
சிங்கப்பூர் விமான சேவை நிறுவனம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன் எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இந்த தர வரிசயைில் சுவிஸ் சர்வதேச விமான சேவை நிறுவனம் பத்தாம் இடத்தை வகிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.