சுவிட்சர்லாந்தில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல்வாதிகள் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறு எனினும் இந்த மருந்து பொருள் தட்டுப்பாட்டிற்கு இதுவரையில் சாதகமான தீர்வு திட்டங்கள் எதுவும் முன்மொழியப்படவில்லை.
கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் சுமார் ஆயிரம் மருந்து பொருட்கள் தட்டுப்பாடு நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக இவ்வாறு மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அண்மைக்காலமாக மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு உக்கிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்பொழுது சுமார் 600 வகையான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவை கையிருப்பில் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விநியோக சங்கிலி பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை, உக்ரைன் ரஷ்ய போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளினால் இவ்வாறு மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.