கோழி இறைச்சி நுகர்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றை நுகர்வது தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோழி இறைச்சி மற்றும் முட்டை என்பனவற்றை நுகரும்போது நன்றாக சமைத்து உட்கொள்ளுமாறும் பச்சையாகவோ அல்லது குறைந்த அளவில் வேக வைத்தோ உட்கொள்ள வேண்டாம் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் அண்மைக்காலமாக பறவை காய்ச்சல் பரவுகை தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
இந்த பறவை காய்ச்சல் பரவுகை காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டை நுகர்வு தொடரில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.
பறவை காய்ச்சல் பரவுகை தொடர்பில் கண்டறிவதற்கான பிசிஆர் பரிசோதனை கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மருத்துவ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பறவைகள் மத்தியில் பரவக்கூடிய இந்த பறவை காய்ச்சலானது சில சந்தர்ப்பங்களில் மனிதர்களுக்கும் ஏற்படக்கூடும் எனவும் இதனால் இது குறித்து அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பறவைகள் மற்றும் அவற்றின் கழிவுகளை தொடுவதனை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
பறவை பண்ணைகளை பார்வையிடுவதை தவிர்க்குமாறு மேலும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்ட பறவைகள் அல்லது இறந்த பறவைகள் தென்பட்டால் அது குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.