ஐரோப்பிய பிராந்தியத்தில் விற்பனை செய்யப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்றில் பாரியளவு தொகை பணப் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
யூரோ மில்லியன்ஸ் என்னும் லொத்தர் சீட்டிலுப்பில் 204.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
இந்த லொத்தர் சீட்டிலுப்பில் வென்றெடுக்கப்பட்ட வெற்றி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
14 16 37 45 மற்றும் 49 என்ற இலக்கங்களுடன் கூடிய லொத்தர் சீட்டுக்கு 200 மில்லியன் பிராங்க் பண பரிசு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த லொத்தர் சீட்டிலுப்பானது ஐரோப்பாவின் 12 நாடுகளிலும் சுவிட்சர்லநர்திலும் லிச்சென்டினிலும் சென்டினிலும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த சீட்டிலுப்பில் 16 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் பண பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இந்த லொத்தர் சீட்டிலுப்பில் 200 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் பணப் பரிசு வென்றது யார் என்பது பற்றிய விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.