சுவிட்சர்லாந்தின் ஜெனிவா விமான நிலையத்தின் பணிகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக விமான நிலைய பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை ஜெனீவா விமான நிலைய பகுதியில் நிலவிய வெள்ள நிலைமைகளினால் விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டன.
விமான நிலையம் சுமார் 2 மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக ஜெனிவாவில் இருந்து புறப்படவிருந்த 22 விமானங்கள் விமான பயணங்களை ரத்து செய்யப்பட வேண்டியிருந்தது.
இதேபோன்று சில விமானங்கள் தரையிறக்கப்படுவதும் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்ட காரணத்தினால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு விமான நிலையத்தில் நிர்க்கதியாக இருந்த பயணிகளுக்கு விமான நிலைய அதிகாரிகள் உணவு, பானங்கள் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய தினம் ஜெனிவா விமான நிலையத்தில் கடுமையான மழையுடன் இடி மின்னல் தாக்கமும் ஏற்பட்டிருந்தது.
இதனால் சில விமான நிலையத்தை அண்டிய சில பகுதிகளிலும் விமான நிலையத்திலும் வெள்ளம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.