சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் விமானம் ஒன்றில் உள்ளே வீசிய துர்மணம் காரணமாக விமான பயணம் ரத்து செய்யப்பட்டது.
சுவிஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான LX1722 என்ற விமானமே இவ்வாறு விமான பயணத்தை ரத்து செய்துள்ளது.
சுவிட்சர்லாந்திலிருந்து இருந்து இத்தாலிக்கு பயணிக்கவிருந்த விமானம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானத்திற்குள் வழமைக்கு மாறாக துர்மணம் வீசியதாக தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலியின் துறைமுக நகரமான ப்ரிண்ட்ஷிவிற்கு பயணிக்க சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் பயணிக்கவிருந்த 180 பயணிகளும் வேறு ஒரு விமானத்தில் இத்தாலிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விமான பயணம் ரத்து செய்யப்பட்ட காரணத்தினால் பயணிகளுக்கு தேவையான தங்குமிட வசதிகள், டாக்ஸி சேவைகள் மற்றும் உணவு உள்ளிட்ட ஏனைய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
என்ன காரணத்தினால் விமானத்தில் துர்மணம் வீசியது என்பது குறித்த தகவல்களை விமான சேவை நிறுவனம் இதுவரையில் வெளியிடவில்லை.