சுவிட்சர்லாந்தின் வோட் கான்டனில் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் கடுமையான காற்று மற்றும் மழை பெய்த காரணத்தினால் சொத்துக்களுக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டிருந்தது.
சுமார் 20 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக வோட் கான்டன் கட்டட காப்புறுதி நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.
எவ்வாறு எனினும் இந்த நட்டையீட்டுத் தொகை மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
காப்புறுதி நட்டஈடு கோரல்கள் மேலும் 2000 தொடக்கம் 3000 வரையில் தாக்கல் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.