அமெரிக்காவும் சுவிட்சர்லாந்தும் நிதி தகவல்களை பரிமாறிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளன.
எதிர்வரும் 2027ம் ஆண்டு முதல் இவ்வாறு நிதி தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பேர்ன் நகரில் இந்த திட்டம் குறித்த உடன்படிக்கை இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெளிநாட்டு வரிக் கணக்கு இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கையின் பிரகாரம் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் அமெரிக்கப் பிரஜைகளின் நிதி விபரங்களை பரிமாற்றம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது அமெரிக்காவிற்கு சுவிட்சர்லாந்து நிதி தகவல்களை வழங்கினாலும் அமெரிக்காவிடமிருந்து தகவல் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை.
எதிர்வரும் 2027ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையில் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.