சுவிஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்றின் மீது மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
LX1086 என்ற விமானம் இவ்வாறு இடி மின்னல் தாக்கத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடி மின்னல் தாக்கம் காரணமாக குறித்த விமானம் அவசரமாக சூரிச் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் விமான சேவைக்கு சொந்தமான LX1086 என்ற விமானம் ஜெனீவாவிலிருந்து பிராங்க்புருட் நோக்கிப் பயணித்த போது இவ்வாறு இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்தினால் உடனடியாக விமானம் சூரிச் விமான நிலையத்திற்கு திசை திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானம் ஒடு பாதையிலிருந்து புறப்பட்டு சில நிமிடங்களில் மின்னல் தாக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானத்தில் சுமார் 100 பயணிகள் பயணம் செய்திருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.