உலகில் வாழ்வதற்கு மிகவும் உசிதமான நகரங்களின் வரிசையில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் மூன்றாம் இடத்திற்கு தெரிவாகியுள்ளது.
உலகில் வாழ்வதற்கு மிகவும் உசிதமான நகரங்களினது, இந்த ஆண்டுக்கான தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தை ஒஸ்ட்ரியாவின் வியன்னா பெற்றுக்கொண்டுள்ளது.
இரண்டாம் இடத்தை டென்மார்க்கின் கோபென்கென் நகரமும், மூன்றாம் இடத்தை சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரம் பெற்றுக்கொண்டுள்ளன.
இந்த தர வரிசையில் அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நான்காம் இடத்தையும், கனடாவின் கல்கரி நகரம் ஐந்தாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
பொருளியல் புலனாய்வுப் பிரிவினால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உலகின் 173 நகரங்கள் இவ்வாறு தர வரிசைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார நலன், கலாசாரம், சுற்றாடல், பேண்தகு நிலைமை, உட்கட்டுமானம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி இந்த ஆய்வு தர வரிசை முன்னெடுக்கப்பட்டுள்ளது.