ஜெர்மனியில் ஏற்பட்ட நிலநடுக்கம் சுவிட்சர்லாந்து முழுவதும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெர்மனியின் வடமேற்கு பகுதியான Laufenburg AG பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 4.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கமானது சுவிட்சர்லாந்து முழுவதிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் தொடர்பில் சுமார் 1200 பதிவுகள் பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு நபர்களும் நிலநடுக்கம் தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர்.
நிலநடுக்கமானது ஏற்பட்ட இடத்தில் மையப் பகுதியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உணரப்பட்டுள்ளது.
இவ்வாறான அளவில் நிலநடுக்கம் ஏற்படும் போது சிறிய அளவு சேதங்கள் பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
வருடம் ஒன்றுக்கு சுமார் 1000 நில நடுக்கங்கள் பதிவாகும் எனவும் இந்த ஆண்டில் இதுவரையில் 866 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.