சுவிட்சர்லாந்தில் 20 வீதமானவர்களை உடற்பயிற்சி செய்வதில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலக அளவில் போதிய அளவு உடற்ப பயிற்சி செய்யாதவர்கள் காரணமாக பல்வேறு சுகாதார பிரச்சனைகள் ஏற்படுவதுடன் அது அந்தந்த நாடுகளின் சுகாதார கட்டமைப்பிற்கு நிதிச் சுமையை ஏற்படுத்துகின்றது என சுட்டிக்காட்டி உள்ளது.
சுவிட்சர்லாந்தை பொருத்தவரையில் ஐந்தில் ஒருவர் போதிய அளவு உடற்பயிற்சி செய்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் சராசரியாக ஒருவர் உடற்பயிற்சி செய்யும் அளவுடன் ஒப்பீடு செய்யும் போது 20 வீதமான சுவிஸ் பிரஜைகள் போதிய அளவு உடற்பயிற்சி செய்வதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உலக அளவில் 31 வீதமான வயது வந்தவர்கள் போதிய அளவு உடற்பயிற்சியை மேற்கொள்வதில்லை எனவும் இது உலகின் மொத்த சனத் தொகையில் 1.8 பில்லியன் மக்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வாரம் ஒன்றிற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ளது. விளையாட்டுப் போட்டிகளை தொலைக்காட்சிகளில் கண்டு களிப்பதனை விடவும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது முக்கியமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் உடற்பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை குறைவடைந்த போதிலும் சுவிட்சர்லாந்தில் உடற்பயிற்சி செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.