முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இன்றைய தினம் அதிகாலை மஹிந்த ராஜபக்ஷ சீனா நோக்கி புறப்பட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது சீனாவின் பிரதமர் லீ கியாங், வெளிவிவகார அமைச்சர் வெங் யீ உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக சிங்கள இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இதுவரையில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்தோ அல்லது வேட்பாளரை நிறுத்துவது குறித்தோ வெளிப்படையாக கருத்துக்களை வெளியிடவில்லை.
இவ்வாறான ஒரு பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ சீனாவிற்கான விஜயத்தை முன்னெடுக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு மஹிந்த சீனாவிற்கு விஜயம் செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.